Asianet News TamilAsianet News Tamil

சற்று நேரத்தில் சென்னையை உலுக்கிய சம்பவம்... கொரோனாவுக்கு மருந்துகண்டுபிடித்து பரிசோதித்தவருக்கு சோகம்..!

சென்னை தி.நகரில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில், ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சென்னையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Drug detection test for corona rocking Chennai
Author
Tamil Nadu, First Published May 8, 2020, 12:27 PM IST

சென்னை தி.நகரில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில், ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சென்னையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தி.நகரில் வசித்து வருபவர் ராஜ்குமார். மருத்துவரான இவரும், பெருங்குடியைச் சேர்ந்த சிவநேசன் என்பவரும் நெருங்கிய நண்பர்கள். சிவநேசன் கடந்த 27 வருடமாகச் சுஜாதா பயோ டெக் என்ற நிறுவனத்தில் புரோடக்சன் மேனேஜராக, காசிப்பூரில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் சளி மருந்து உட்பட பல்வேறு மருந்துகளைக் கண்டுபிடித்ததில் முக்கிய பங்காற்றியதாகக் கூறப்படுகிறது.

Drug detection test for corona rocking Chennai

இந்நிலையில் தற்போது உலகத்தையே உலுக்கி வரும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அவர் இறங்கியுள்ளார். சோடியம் நைட்ரேட் மூலம் நைட்ரிக் ஆக்ஸைடு தயாரித்தால் கொரோனாவை எப்படியும் கட்டுப்படுத்திவிடலாம் எனக் கூறி, தீவிரமாக கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்த சோதனைகள் அவரது நண்பரான மருத்துவர் ராஜ்குமார் வீட்டில் நடந்துள்ளது.Drug detection test for corona rocking Chennai

இந்த சூழ்நிலையில் நேற்று பரிசோதனையிலிருந்த சிவநேசன், சோடியம் நைட்ரேட் கரைசலைப் பரிசோதனைக்காக அவரே குடித்துள்ளார். குடித்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை, உடனடியாக தி. நகரில் உள்ளார் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி சிவநேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிப்பதாகக் கூறி, ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சென்னையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த விபரீத முயற்சியை யாரும் மேற்கொள்ள வேண்டாம் என மருத்துவ- காவல்துறையினர் கேட்டுகொண்டுள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios