எந்த நோயாக இருந்தாலும் டோன்ட் டோரி.. மருந்தே இல்லாமல் சரி செய்யலாம்.. பத்ம பிரியதர்ஷினி சொல்லும் ரகசியம்!
யோகாவை அங்கீகரிக்கும் விதமாகவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடனும் ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
கழுத்து, முதுகு, மூட்டு எலும்புகளில் ஏற்படக்கூடிய வலிகளில் இருந்து முழுமையான நிவாரணம் பெற சிறிய சிறிய யோகா பயிற்சிகளை மேற்கொண்டாலே போதும் என யோக தத்துவா மையத்தின் நிறுவனர் பத்ம பிரியதர்ஷினி கூறியுள்ளார்.
யோகாவை அங்கீகரிக்கும் விதமாகவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடனும் ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா தெரபிஸ்ட் மற்றும் யோக தத்துவா மையத்தின் நிறுவனர் பத்ம பிரியதர்ஷினி அளித்துள்ள பேட்டியில்: யோகா மற்றும் அக்குபஞ்சர் தொடர்பாக கடந்த 10 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வரும் பத்ம, பிரியதர்ஷினி, அனைவரும் எல்லா விதமான யோகா பயிற்சிகளையும் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. அவரவர் செய்கிற வேலைகளுக்கு ஏற்றார் போல் எளிமையான யோகா பயிற்சிகளை யோக தத்துவா மூலம் கற்றுக்கொள்ளலாம் என்றார்.
இதையும் படிங்க: International Yoga Day: ஈஷாவில் ஆதியோகி முன்பு நூற்றுக்கணக்கான CRPF வீரர்கள் யோகா செய்து அசத்தல்
குறிப்பாக கழுத்து, முதுகு, மூட்டு எலும்புகளில் ஏற்படக்கூடிய வலிகளில் இருந்து முழுமையான நிவாரணம் பெற சிறிய சிறிய யோகா பயிற்சிகளை மேற்கொள்ளலாம். யோக தத்துவா மூலமாக மிகப்பெரிய கார்ப்ரேட் நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கு கழுத்து, முதுகு உள்ளிட்ட வலிகளில் இருந்து நிவாரணம் பெறுவதற்கான யோகா பயிற்சிகளை கற்றுத்தருகிறோம். இது அவர்களது வலிகளில் இருந்து நிவாரணம் பெற உதவுவது மட்டுமின்றி, தனிமனிதர்களின் வாழ்க்கை முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்த உதவுகிறது.
யோகா தெரபி மட்டுமின்றி உணவுக்கட்டுப்பாடு தொடர்பாக கற்பிக்கிறோம். என்னென்ன மாதிரியான உணவுகளை எந்தெந்த நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் என்னென்ன மாதிரியான சத்துக்கள் கிடைக்கும் என அறிவுறுத்துகிறோம். மேலும் தற்காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சந்திக்கக்கூடிய பிரச்சனைகளான ரத்த அழுத்தம், நீரழிவு நோய், உடல் பருமன் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிரந்தர தீர்வு பெற 15 நிமிடங்களே செய்யக்கூடிய யோகா பயிற்சிகள் உள்ளன.
இதையும் படிங்க: ஸ்ரீநகரில் யோகா செய்த பிரதமர் மோடி.. பங்கேற்பாளார்களுடன் எடுத்த செல்ஃபி போட்டோஸ் இதோ..
குறிப்பாக சர்க்கரை நோயில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான பல பயிற்சிகள் யோகாவில் உள்ளன. அத்துடன் யோகா தெரபி மூலமாக சர்க்கரை நோய்க்கான மருந்துகளை எடுப்பதை குறைக்கவும், அதனால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகளை தடுக்கவும் யோகா தெரபி மூலம் பயிற்சி அளிக்கிறோம் என்றார். தொடர்ந்து பேசிய அவர், எந்த நோய்க்கு மருந்து எடுத்துக்கொள்பவராக இருந்தாலும் சரியான யோகாவை தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலமாக தீர்வு பெறலாம். ஒரு கட்டத்திற்கு மேல் அவர்கள் மருந்துகளை முற்றிலும் நிறுத்திவிட்டு நாங்கள் கற்றுத்தந்த யோகா தெரபியை முறையாக செய்து வந்தாலே போதுமானதாக இருக்கும் என்றார்.