Asianet News TamilAsianet News Tamil

கடமை தவறாத தமிழக மருத்துவர்கள்... கருப்பு பேட்ஜ் அணிந்து மருத்துவ சேவை..!

பயிற்சி டாக்டர் தாக்கப்பட்டதை கண்டித்து, மேற்குவங்க அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குள் மூடப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் கருப்புப் பட்டை அணிந்து மருத்துவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

doctors working in hospital
Author
Tamil Nadu, First Published Jun 17, 2019, 1:28 PM IST

பயிற்சி டாக்டர் தாக்கப்பட்டதை கண்டித்து, மேற்குவங்க அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குள் மூடப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் கருப்புப் பட்டை அணிந்து மருத்துவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

கொல்கத்தாவில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்ற வந்த ஒரு நோயாளி, திடீரென இறந்தார். இதனால், அவரது உறவினர்கள், அங்கிருந்த பயிற்சி டாக்டரை சரமாரியாக தாக்கினர். doctors working in hospital

இதை கண்டித்து மேற்குவங்கம் மாநிலத்தில் டாக்டர்கள் போராட்டம் வெடித்தது. பயிற்சி டாக்டர்களுக்க அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவர்களும் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அம்மாநிலத்தில் பதற்றம் நிலவுகிறது. இதைதொடர்ந்து பத்திரிகை மற்றும் மீடியா முன்னிலையில், பயிற்சி டாக்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அம்மாநில முதல்வருடன் என பயிற்சி டாக்டர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 doctors working in hospital

இதற்கிடையில், பயிற்சி டாக்டர் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், பணிப்பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும், இந்திய மருத்துவ சங்கம் இன்று 24 மணி நேர போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. அதை ஏற்று இன்று நாடு முழுவதும், தனியார் மற்றும் அரசு டாக்டர்கள் போராட்டம் தொடர்ந்தது. தமிழகத்திலும் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் மூடப்பட்டன. doctors working in hospital

சென்னை, மதுரை, திருச்சி, கோவை,  புதுச்சேரி, திருவள்ளூர், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்ட அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் கருப்புப் பட்டை அணிந்து பணிபுரிந்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். இருப்பினும் புற மற்றும் உள்நோயாளிகளுக்கான சிகிச்சையில் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. அரசு மருத்துவமனை களின் நுழைவு வாயில் முன்பு டாக்டர்கள் ஹெல்மெட அணிந்தும், கருப்புப் பட்டை அணிந்தும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios