அப்போது அங்கு நின்றவர்களை அவரவர் வீட்டுக்கு கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். அதற்கு கும்பலில் இருந்த ஒருவர் தாங்கள் எந்த தவறும் செய்யாத நிலையில் ஏன் விரட்டுகிறீர்கள்? என கேள்வி கேட்டதோடு, தகாத வார்த்தையால் திட்டினர். தங்களோடு இந்த ஏரியா கவுன்சிலரும் இருப்பதாக கூறினார்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் பெண் கவுன்சிலரின் கணவர் ஆதரவாளர்களுடன் சேர்ந்து ஆபாசமாக பேசி மிரட்டிய வீடியோ வைரலாகி வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரத்தில் பிரியாணி கடையில் பெண் கவுன்சிலரின் மைத்துனர் மாமூல் கேட்டு அடிதடியில் ஈடுபட்ட சம்பவம் அடங்குவதற்குள் மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்நிலையில், வண்ணாரப்பேட்டை ஜெ.பி.கோவில் தெரு பகுதியில் காவலர்கள் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கும்பலாக நின்று கொண்டு சாலையில் சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு நின்றவர்களை அவரவர் வீட்டுக்கு கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். அதற்கு கும்பலில் இருந்த ஒருவர் தாங்கள் எந்த தவறும் செய்யாத நிலையில் ஏன் விரட்டுகிறீர்கள்? என கேள்வி கேட்டதோடு, தகாத வார்த்தையால் திட்டினர். தங்களோடு இந்த ஏரியா கவுன்சிலரும் இருப்பதாக கூறினார்.
51வது வார்டுக்குட்பட்ட அந்த பகுதியின் கவுன்சிலர் பெண் என்ற நிலையில் அங்கு நின்றிருந்த அனைவரும் ஆண்கள் என்பதால் யார் அந்த கவுன்சிலர் சொல்லுங்க? என்று போலீசார் திரும்ப கேட்க அங்கு நின்றிருந்தது கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் என்பது தெரியவந்தது. இவர் சென்னை வடக்கு மாவட்டத்தின் உதயநிதி ரசிகர் மன்ற செயலாளராகவும் இருந்து வருகிறார். ஒரு போலீசார் என்று பாராமல் கவுன்சிலரின் கணவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அசிங்க அசிங்கமாக பேசிய வீடியோ வைரலாகி வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.