தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த நேற்று முன் தினமும் நேற்றும் 500ஐ கடந்த நிலையில், இன்று அதிகபட்சமாக 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. வழக்கம்போலவே அதிகபட்சமாக சென்னையில் 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 2328ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் பாதிப்பு கட்டுக்குள் இருந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் நிறைய பேருக்கு கொரோனா தொற்று உறுதியாவதையடுத்து, கடலூர், விழுப்புரம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்திருக்கிறது. 

இன்று ஒரே நாளில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிகபட்சமாக அரியலூரில் 188 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 222ஆக அதிகரித்துள்ளது. கடலூரில் 95 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 45 பேருக்கும் கொரோனா உறுதியானதையடுத்து முறையே பாதிப்பு எண்ணிக்கை 324 மற்றும் 87ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா கணக்கை தொடங்கிய ஆரம்பத்தில் பாதிப்பு தீவிரமாக இருந்த கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய கொங்கு மாவட்டங்களில் பாதிப்பு இப்போது கட்டுக்குள் இருக்கிறது. 

மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்:

அரியலூர் - 222

செங்கல்பட்டு - 145

சென்னை - 2328

கோவை - 146

கடலூர் - 324

தர்மபுரி - 2

திண்டுக்கல் - 107

ஈரோடு - 70

கள்ளக்குறிச்சி - 53

காஞ்சிபுரம் - 87

கன்னியாகுமரி - 17

கரூர் - 45

கிருஷ்ணகிரி - 4

மதுரை - 111

நாகப்பட்டினம் - 45

நாமக்கல் - 76

நீலகிரி - 13

பெரம்பலூர் - 40

புதுக்கோட்டை - 3

ராமநாதபுரம் - 21

ராணிப்பேட்டை - 43

சேலம் - 35

சிவகங்கை - 12

தென்காசி - 51

தஞ்சாவூர் - 63

தேனி - 51

திருநெல்வேலி - 65

திருப்பத்தூர் - 20

திருப்பூர் - 114

திருவள்ளூர் - 129

திருவண்ணாமலை - 42

திருவாரூர் - 32

திருச்சி - 57

தூத்துக்குடி - 29

வேலூர் - 28

விழுப்புரம் - 164

விருதுநகர் - 35.