Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவின் கொட்டத்தை அடக்கிய கொங்கு மண்டலம்.. வட மாவட்டங்களில் கோர தாண்டவம்.. மாவட்ட வாரியாக முழு விவரம்

தமிழ்நாட்டில் இன்று 580 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 5409ஆக அதிகரித்துள்ள நிலையில், மாவட்ட வாரியாக பாதிப்பு விவரத்தை பார்ப்போம்.
 

district wise corona cases list in tamil nadu on may 7
Author
Chennai, First Published May 7, 2020, 8:22 PM IST

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக 4வது நாளாக இன்று, 500க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 771 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 14 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், 580 பேருக்கு கொரோனா தொற்று உருவாகியுள்ளது. 

அதில் 316 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். வழக்கம்போலவே இன்றும் சென்னையில் தான் பாதிப்பு அதிகம். எனவே சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2644ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் அதிகபட்சமாக 63 பேருக்கும் விழுப்புரத்தில் 45 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அரியலூரில் 24 பேரும் பெரம்பலூரில் 33 பேரும் கடலூரில் 32 பேரும் இன்று புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்து சொந்த ஊருக்கு திரும்பியவர்களில் நிறைய பேருக்கு கொரோனா தொற்று உறுதியாவதால் மற்ற மாவட்டங்களிலும் குறிப்பாக வட மாவட்டங்களில் பாதிப்பு தாறுமாறாக அதிகரித்திருக்கிறது. கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும் அதற்கடுத்தபடியாக அரியலூர் மற்றும் பெரம்பலூரிலும் பாதிப்பு அதிகரித்து கொண்டிருக்கிறது.

பச்சை மண்டலமாக நீண்டகாலம் நீடித்த கிருஷ்ணகிரியில் ஏற்கனவே 4 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், இன்றும் நான்கு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் பாதிப்பு 8ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா பாதிப்பு ஆரம்பத்தில் அதிவேகத்தில் உயர்ந்த கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய கொங்கு மாவட்டங்களில் அண்மைக்காலமாக புதிதாக  பாதிப்பு உறுதியாகவில்லை. எனவே கொரோனா கொங்கு மாவட்டங்களில் முழுமையாக கட்டுக்குள் வந்துள்ளது. 

district wise corona cases list in tamil nadu on may 7

மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்:

அரியலூர் - 246

செங்கல்பட்டு - 158

சென்னை - 2644

கோவை - 146

கடலூர் - 356

தர்மபுரி - 2

திண்டுக்கல் - 107

ஈரோடு - 70

கள்ளக்குறிச்சி - 58

காஞ்சிபுரம் - 89

கன்னியாகுமரி - 17

கரூர் - 47

கிருஷ்ணகிரி - 8

மதுரை - 111

நாகப்பட்டினம் - 45

நாமக்கல் - 76

நீலகிரி - 13

பெரம்பலூர் - 73

புதுக்கோட்டை - 5

ராமநாதபுரம் - 23

ராணிப்பேட்டை - 50

சேலம் - 35

சிவகங்கை - 12

தென்காசி - 51

தஞ்சாவூர் - 65

தேனி - 54

திருநெல்வேலி - 65

திருப்பத்தூர் - 22

திருப்பூர் - 114

திருவள்ளூர் - 191

திருவண்ணாமலை - 59

திருவாரூர் - 32

திருச்சி - 62

தூத்துக்குடி - 30

வேலூர் - 29

விழுப்புரம் - 205

விருதுநகர் - 35.
 

Follow Us:
Download App:
  • android
  • ios