தமிழ்நாட்டில் 10 நாட்களாக தொடர்ந்து, தினமும் 500க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், நேற்றும் இன்றும் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. சென்னையை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. 

குறிப்பாக, கோயம்பேடு சந்தையை மையமாக கொண்டு கொரோனா அதிகமாக பரவிய விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய வடமாவட்டங்களிலும் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல் ஆகிய 5 கொங்கு மாவட்டங்களும் கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்டுள்ளன. 

இன்று தமிழ்நாட்டில் பாதிப்பு உறுதியான 434 பேரில் 310 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். 19 மாவட்டங்களில் ஒரு பாதிப்பு கூட இல்லை. எஞ்சிய மாவட்டங்களில் பாதிப்பு உறுதியான 124 பேரில் 49 பேர் மாலத்தீவு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். வெளிமாநில தொடர்பில்லாத தமிழ்நாட்டை சேர்ந்த 75 பேருக்கு மட்டுமே இன்று கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. 

அரியலூர், கோவை, தர்மபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, திருப்பத்தூர், திருவாரூர், திருப்பூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய 19 மாவட்டங்களிலும் இன்று பாதிப்பே இல்லை. 

மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்:

அரியலுர் - 348

செங்கல்பட்டு - 450

சென்னை - 5946

கோவை - 146

கடலூர் - 416

தர்மபுரி - 5

திண்டுக்கல் - 114

ஈரோடு - 70

கள்ளக்குறிச்சி - 61

காஞ்சிபுரம் - 176

கன்னியாகுமரி - 35

கரூர் - 54

கிருஷ்ணகிரி - 20

மதுரை - 143

நாகப்பட்டினம் - 47

நாமக்கல்  - 77

நீலகிரி - 14

பெரம்பலூர் - 139

புதுக்கோட்டை - 7

ராமநாதபுரம் - 30

ராணிப்பேட்டை - 78

சேலம்  - 35

சிவகங்கை - 12

தென்காசி - 56

தஞ்சாவூர் - 71

தேனி - 78

திருப்பத்தூர் - 28

திருவள்ளூர் - 516

திருவண்ணாமலை - 140

திருவாரூர் - 32

தூத்துக்குடி - 48

திருநெல்வேலி - 136

திருப்பூர் - 114

திருச்சி - 67

வேலூர் - 34

விழுப்புரம் - 306

விருதுநகர் - 46.