தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதற்கு காரணம், இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 9643 பேருக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதுதான். 

அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை செய்வது அவசியமாகிறது. இதுபோன்ற பெருந்தொற்று பரவும்போது, அதிகமானோருக்கு டெஸ்ட் செய்து அதிகமான பாசிட்டிவ் கேஸ்களை கண்டறிவதுதான், தடுப்பு நடவடிக்கையில் முக்கியமான ஒன்று. அதனால் அதை தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்துவருகிறது. 

கடந்த சில நாட்களாக தினமும் சுமார் 7000 டெஸ்ட் செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று கிட்டத்தட்ட 10 ஆயிரம் டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. அதனால்தான் இன்று பாதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமான பாசிட்டிவ் கேஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. 

சென்னையில் கொரோனா சமூக தொற்றாக பரவிவிட்ட நிலையில், தினமும் தமிழ்நாட்டில் உறுதியாகும் பாதிப்பு எண்ணிக்கையில் 80-90% சென்னையில் தான் உறுதியாகிறது. இன்று கொரோனா உறுதியான 161 பேரில் 138 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். எனவே சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 906ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையை தவிர கொரோனா உறுதியான மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்கம்தான். 

கொரோனா தமிழ்நாட்டில் உறுதியான ஆரம்ப காலக்கட்டத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த ஈரோட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70 பேருமே குணமடைந்ததையடுத்து கொரோனா இல்லாத மாவட்டமாக ஈரோடு உருவானது. ஈரோட்டிற்கு அடுத்து நீலகிரி மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களும் அனைத்து கொரோனா நோயாளிகளையும் குணப்படுத்தி கொரோனா இல்லாத மாவட்டங்களாக திகழ்கின்றன. தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பில் சென்னை தான் சிம்மசொப்பனமாக திகழ்கிறது. 

மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்:

அரியலூர் - 7

செங்கல்பட்டு - 78

சென்னை - 906

கோவை - 141

கடலூர் - 27

தர்மபுரி - 1

திண்டுக்கல் - 80

ஈரோடு - 70

கள்ளக்குறிச்சி - 6

காஞ்சிபுரம் - 26

கன்னியாகுமரி - 16

கரூர் - 42

மதுரை - 84

நாகப்பட்டினம் - 44

நாமக்கல் - 59

நீலகிரி - 9

பெரம்பலூர் - 9

புதுக்கோட்டை - 1

ராமநாதபுரம் - 18

ராணிப்பேட்டை - 40

சேலம் - 32

சிவகங்கை - 12

தென்காசி - 38

தஞ்சாவூர் - 55

தேனி - 43

திருநெல்வேலி - 63

திருப்பத்தூர் - 18

திருப்பூர் - 112

திருவள்ளூர் - 55

திருவண்ணாமலை - 15

திருவாரூர் - 29

திருச்சி - 51

தூத்துக்குடி - 27

வேலூர் - 22

விழுப்புரம் - 50

விருதுநகர் - 32.