தமிழ்நாட்டில் இன்று 6880 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 54 பேருக்கு கொரோனா உறுதியானது. அதேவேளையில், இன்று ஒரே நாளில் 90 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழ்நாட்டில் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு கடுமையாக உள்ளது. இன்று கொரோனா உறுதியான 54 பேரில் 27 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். அதில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 4 பேர். எனவே சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 400ஐ எட்டிவிட்டது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய கொங்கு மாவட்டங்களில் பாதிப்பு சற்று தீவிரமாக உள்ளது.

கொரோனா அண்டாத மாவட்டங்களாக புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 3 மாவட்டங்களும் இருந்துவந்த நிலையில், புதுக்கோட்டையில் ஏற்கனவே ஒருவருக்கு கொரோனா உறுதியாகிவிட்டது. இந்நிலையில், இதுவரை கொரோனா அண்டாத மாவட்டமாக இருந்த தர்மபுரியில் இன்று ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. எனவே கிருஷ்ணகிரி மட்டுமே கொரோனா இல்லாத மாவட்டமாக இன்னும் திகழ்கிறது.

மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்:

அரியலூர் - 6

செங்கல்பட்டு - 57

சென்னை - 400

கோவை - 134

கடலூர் - 26

தர்மபுரி - 1

திண்டுக்கல் - 80

ஈரோடு - 70

கள்ளக்குறிச்சி - 5

காஞ்சிபுரம் - 1

கன்னியாகுமரி - 16

கரூர் - 42

கிருஷ்ணகிரி - 0

மதுரை - 52

நாகப்பட்டினம் - 44

நாமக்கல் - 55

நீலகிரி - 9

பெரம்பலூர் - 5

புதுக்கோட்டை - 1

ராமநாதபுரம் - 12

ராணிப்பேட்டை - 39

சேலம் - 29

சிவகங்கை - 12

தென்காசி - 32

தஞ்சாவூர் - 55

தேனி - 43

திருநெல்வேலி - 63

திருப்பத்தூர் - 18

திருப்பூர் - 110

திருவள்ளூர் - 50

திருவண்ணாமலை - 13

திருவாரூர் - 29

திருச்சி - 51

தூத்துக்குடி - 27

வேலூர் - 22

விழுப்புரம் - 42

விருதுநகர் - 22.