அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்தால் இனி ஆப்பு தான்.. தமிழக அரசு எச்சரிக்கை..!

பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் மனைவி அல்லது கணவர் உயிருடன் இருக்கையில் 2வது திருமணம் செய்தால் அது தண்டனைக்குரிய குற்றம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை மீறி 2வது திருமணம் செய்வோர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. 

Disciplinary action in case of 2nd marriage by government employees

அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்தால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் மனைவி அல்லது கணவர் உயிருடன் இருக்கையில் 2வது திருமணம் செய்தால் அது தண்டனைக்குரிய குற்றம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை மீறி 2வது திருமணம் செய்வோர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. 

Disciplinary action in case of 2nd marriage by government employees

மேலும், தமிழக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், அவர் பணியிலோ அல்லது விடுப்பிலோ அல்லது அயற்பணியில் இருப்பினும் தமிழக அரசு 1973ம் ஆண்டு அரசுப்பணியாளர் நடத்தை விதிகளுக்கு உள்பட்டவர்களாவர். 

Disciplinary action in case of 2nd marriage by government employees

எனவே, கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்கும் நிலையில், அவர்கள் செய்துகொள்ளும் மற்றொரு திருமணம் இந்திய தண்டணைச் சட்டம் 494ம் பிரிவின்படி தண்டனைக்குரிய குற்றம் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios