கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழக சுகாதார துறை, பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தாலும், மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் மட்டும் காரோண பாதிப்பு கூடி கொண்டே செல்கிறது. 

இதனால் தேவையில்லாமல் சென்னை பகுதிகளில் சுற்றி திரிந்தால் அவர்கள் 14 நாட்களுக்கு தனிமை படுத்தப்படுவார்கள் என்றும், அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அதிரடியாக தெரிவித்துள்ளது.

சென்னையில், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்: தமிழ் பிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் மாற்றமா? போட்டியாளர்கள் பற்றி வெளியே கசிந்த தகவல்!
 

எனவே இந்த 6 மண்டலங்களில், 1.75 லட்சம் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அதனால், கொரோனாவை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது. பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகள், தெருக்களுக்கு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளன.

இந்த பகுதி மக்கள் வெளியே வருவதை தவிர்க்கும் வகையில், காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள், வீடுகளுக்கே சென்று, விற்பனை செய்யப்படுகிறது. மிகவும் வறுமையில் வாடி வருபவர்களுக்கு, உரிய பாதுகாப்பு உடை அணிந்து சென்று அங்குள்ள மக்களுக்கு சாப்பாடுகள் வழங்கப்படுகிறது.

மேலும் செய்திகள்: இந்தியாவில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா..! ஒரே நாளில் இத்தனை பேர்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 

மேலும் சென்னையில், சமூக இடைவெளி பின்பற்றாத அலுவலகங்கள், கடைகள் போன்றவற்றை மூடி, 'சீல்' வைப்பதுடன், மூன்று மாதங்கள் திறக்க தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் சென்னையில் எந்தவித அறிகுறியும் இல்லாமல் சுமார் 98% பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் காய்கறி விற்பவர்கள் சுமார் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்: அஜித்தை கட்டிப்பிடித்திருக்கும் விஜய்..! சோசியல் மீடியாவை தெறிக்க விடும் தல - தளபதி போஸ்டர்ஸ்!
 

இந்நிலையில், மக்கள் அனாவசியமாக வெளியில் சுற்றுவதை கட்டுப்படுத்தும் விதத்தில், சென்னை மாநகராட்சி தற்போது அதிரடி தகவலை வெளியிட்டுள்ளது. 

எவ்வித சரியான காரணமும் இன்றி, சென்னை மக்கள் வெளியே வந்தால், அவர்களுக்கு ரூபாய் 100 அபராதம் விதிக்கப்படுவதோடு, 14 நாட்கள் தனிமை படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்: குட்டி பாம்பை கையில் பிடித்து குழந்தை போல் விளையாடும் பிரியமானவள் சீரியல் நடிகை பிரவீனா! என்ன துணிச்சல்!
 

தமிழகத்தில் நேற்றைய தினம் சுமார் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2323 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கடத்த 24 மணியரத்தில் மட்டும் சுமார் 1993 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.