அத்திவரதர் மஞ்சள் நிற பட்டு உடுத்தி, பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நேற்று பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்திவரதர் வைபவம் கடந்த 1ம் தேதி தொடங்கி, வரும் ஆகஸ்ட் 17ம் தேதிவரை 48 நாட்கள் நடைபெற உள்ளது. அதில் வரும் 31ம் தேதிவரை சயன கோலத்திலும், ஆகஸ்ட் 17ம் தேதிவரை நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

இந்த வைபவம் தொடங்கியது முதல் உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் கடந்த 25 நாட்களில் 32 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். பக்தர்கள் சிரமமின்றி அத் வரதரை தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அத்திவரதர் மஞ்சள் நிற பட்டு உடுத்தி, பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நேற்று பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலெக்டராக பணியாற்றிய வெங்கடேசன், நடிகர் பிரபு ஆகியோர் குடும்பத்துடன் வந்து அத்தி வரதரை தரிசனம் செய்தனர்.

அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு வரதராஜ பெருமாள் கோயில் வளாகத்தில் 13 சிறப்பு உண்டியல்கள் வைக்கப்பட்டன. இதில் 1 உண்டியல் கடந்த 17ம் திறக்கப்பட்டு, அதில் இருந்த காணிக்கை எண்ணப்பட்டது. அதில், ரூ.28 லட்சத்து 77 ஆயிரத்து, 907 இருந்தது.

தொடர்ந்து, 4 உண்டியல்களில் இருந்த காணிக்கைகள் நேற்று முன்தினம் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் எண்ணப்பட்டன. ஜூலை 17ம் தேதி திறக்கப்பட்ட உண்டியல் காணிக்கையுடன் சேர்த்து மொத்தமாக ரூ.1 கோடியே 38 லட்சத்து 16 ஆயிரத்து, 319 இருந்தது. மேலும் 22 கிராம் தங்கம், 714 கிராம் வெள்ளிம் காணிக்கையாக போடப்பட்டுள்ளது.