அதிகாலை 2 மணிக்கு மேல் நிவர் புயல் கரையை கடக்க உள்ளதாக தேசிய மீட்புப்படை தலைவர் பிரதான் தகவல் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. நிவர் புயலானது சென்னையிலிருந்து 185 கி.மீ., புதுச்சேரியில் இருந்து 115 கி.மீ., கடலூரில் இருந்து 110 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது. மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்த நிவர் புயல் தற்போது 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.  நிவர் புயல் எப்போது கரையை கடக்கும் என்பது தொடர்பாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. 

இது தொடர்பாக தேசிய மீட்புப்படை தலைவர் பிரதான் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- அதிகாலை 2 மணிக்கு மேல் நிவர் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் 1000 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிவர் புயலின் சவாலை எதிர்கொள்ள முடியும் என பிரதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.