தமிழகத்தில் ஜூலை 12 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு... எவற்றுக்கெல்லாம் தடை நீட்டிப்பு..?

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளை மேலும் ஒரு வாரம் நீட்டித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
 

Curfew with relaxations till July 12 in Tamil Nadu ... for which extension of ban ..?

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “கொரோனா பெருந்தொற்று ஒன்றிய அரசால் பேரிடராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில், 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு நடைமுறையில் இருந்துவருகிறது. கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகளை 31-7-2021 வரை தொடர்ந்து அமல்படுத்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் 29.6.2021 அன்று அறிவித்துள்ளது.Curfew with relaxations till July 12 in Tamil Nadu ... for which extension of ban ..?
தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு 5-7-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், கொரோனா நோய்த் தொற்று வெகுவாக குறைந்துள்ள போதிலும், நோய்த் தொற்று பரவலைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு 5-7-2021 முதல் 12-7-2021 காலை 6.00 மணி வரை தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.Curfew with relaxations till July 12 in Tamil Nadu ... for which extension of ban ..?
* மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து.
* மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்து.
* திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள்.
* பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள்.
* பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள்.
* பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள்.
* நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதி.
 * இறுதிச் சடங்குகளில் 20 நபர்கள் மட்டுமே அனுமதி.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios