சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இருவர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் உச்சக்கட்டத்தை எட்டி வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 669 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,204ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.  மொத்தம் சென்னையில், கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3,839 ஆக அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வந்தாலும் பாதிப்பு சற்றும் குறையவில்லை.

இந்நிலையில், கொரோனா பாதித்து சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் பரிதாபமாக உயிிழந்தனர். சென்னை கொளத்தூரைச் சேர்ந்த 67 வயதான ஆண் ஒருவரும், திருவல்லிக்கேணியை சேர்ந்த 64 வயது பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இதனால், சென்னையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது. தமிழக அளவில் 49ஆக உயர்ந்துள்ளது.