சென்னையில் இதுவரை  767 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 

சென்னையில் இதுவரை 767 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசுதரப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வந்தாலும் அதன் விரீயம் சற்றும் குறையால் இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,162 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 1,210 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 767ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. வடசென்னை பகுதியான ராயபுரத்தில் 189 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. திரு.வி.க.நகரில் 169, தேனாம்பேட்டையில் 85, தண்டையார்பேட்டையில் 77, அண்ணாநகர் 73, கோடம்பாக்கம் 63, வளசரவாக்கம் 30, அம்பத்தூர் 20, அடையாறு 19 , திருவொற்றியூர் 17, பெருங்குடி, ஆலந்தூர் தலா 9, மாதவரம் 4, சோழிங்கநல்லூரில் 2, மணலியில் ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.