சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்யும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தாலும் அதன் விரீயம் கொஞ்சம் கூட குறையாமல் அப்படியே இருந்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் 1,937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 பேர் உயிரிழந்துள்ளனர். குணமடைந்து வீடு திரும்பிவர்களின் எண்ணிக்கை 1101ஆக உள்ளது. இதில், அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தலைநகர் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை அதிகபட்சமாக 570 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை திடீரென தொடர்ந்து அதிகரித்து வருவதால் அவர்களுக்கு யாரிடம் இருந்து இந்த தொற்று ஏற்பட்டது என்ற சங்கிலி தொடரை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்யும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 மேலும்,  குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் கோயம்பேடு மார்கெட்டில் இழுத்து  மூடப்படும் என காவல் ஆணையம் ஏ,கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.