Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் மின்வேகத்தில் பரவும் கொரோனா.. கட்டுப்படுத்த ஊரடங்குதான் ஒரே தீர்வு.. பிரதீப் கவுர் பகீர் தகவல்..!

முதல் அலையில் பதிவான எண்ணிக்கையை விட சென்னையில் நேற்று அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என ஐசிஎம்ஆர் பிரதீப் கவுர் பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.

Corona spreading at high speed in Chennai .. Curfew is the only solution to control... Prabhdeep Kaur
Author
Chennai, First Published Apr 13, 2021, 10:54 AM IST

முதல் அலையில் பதிவான எண்ணிக்கையை விட சென்னையில் நேற்று அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என ஐசிஎம்ஆர் பிரதீப் கவுர் பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நேற்று இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக  2,105 பேர் பாதிக்கப்பட்டனர். அதேபோன்று உயிரிழப்பும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், ஐசிஎம்ஆர் பிரதீப் கவுர் வெளியிட்டுள்ள டுவிட்டரில் பதிவில்;- முதல் அலையில் பதிவான எண்ணிக்கையை விட சென்னையில் அதிக தொற்று பதிவாகிறது. கடந்த ஆண்டை விட சென்னையில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

Corona spreading at high speed in Chennai .. Curfew is the only solution to control... Prabhdeep Kaur

கடந்த ஜுன் மாதம் இறுதியில் 2 வார ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்புதான் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. தற்போது உள்ள நிலையில் தொற்று பாதிப்பு உயரும். தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தினாலும் தொற்று குறைய 14 நாட்கள் வரை ஆகும். எனவே பொதுமக்கள் அத்தியாசிய தேவை தவிர்த்து வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

Corona spreading at high speed in Chennai .. Curfew is the only solution to control... Prabhdeep Kaur

கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும், கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், 3 மாதங்களுக்கு நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும், வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டும். பணியிடங்களில் பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும், அறிகுறி இருந்தால் சோதனை செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios