Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் மட்டும் 4,882 பேர்..! மாவட்ட வாரியாக எகிறிய பாதிப்பு..!

தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 510 பேருக்கு தொற்று உறுதியாகி இதுவரை 4,882 பேர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சென்னையில் நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பிற மாவட்டங்களிலும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

corona positive cases in tamilnadu reached 8,718
Author
Tamil Nadu, First Published May 13, 2020, 8:20 AM IST

இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொடிய வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுரவேகம் எடுத்திருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த பாதிப்பு எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களாக தினமும் 700ஐ கடந்திருக்கிறது. நேற்று முன்தினம் ஒரேநாளில் 798 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்த நிலையில் நேற்று 716 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,718 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6,520 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர்.

corona positive cases in tamilnadu reached 8,718

தற்போதைய நிலவரப்படி 2,134 பேர் கொரோனாவில் இருந்து பூரண நலம் பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர். தமிழகத்தில் இதுவரை 61 உயிர்களை கொரோனா வைரஸ் காவு வாங்கியிருக்கிறது. நேற்று மட்டும் 8 பேர் பலியாகியுள்ளனர். தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 510 பேருக்கு தொற்று உறுதியாகி இதுவரை 4,882 பேர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சென்னையில் நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பிற மாவட்டங்களிலும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்புகள் பின்வருமாறு:

அரியலூர் - 344
செங்கல்பட்டு - 391
சென்னை - 4,882
கோவை - 146
கடலூர் - 396
தர்மபுரி - 5
திண்டுக்கல் - 111
ஈரோடு - 70
கள்ளக்குறிச்சி - 61
காஞ்சிபுரம் - 156
கன்னியாகுமரி - 26
கரூர் - 52
கிருஷ்ணகிரி - 20
மதுரை - 121
நாகப்பட்டினம் - 45
நாமக்கல் - 77
நீலகிரி - 14
பெரம்பலூர் - 132
புதுக்கோட்டை - 6
ராமநாதபுரம் - 30
ராணிப்பேட்டை - 76
சேலம் - 35
சிவகங்கை - 12
தென்காசி - 53
தஞ்சாவூர் - 69
தேனி - 66
திருப்பத்தூர் - 28
திருவள்ளூர் - 467
திருவண்ணாமலை - 105
திருவாரூர் - 32
தூத்துக்குடி - 35
திருநெல்வேலி - 93
திருப்பூர் - 114
திருச்சி - 67
வேலூர் - 34
விழுப்புரம் - 299
விருதுநகர் - 40

இதுமட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 4 பேருக்கு விமான நிலையத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து விமான நிலையத்திலேயே அவர்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். அவற்றையும் சேர்த்து மொத்தம் 8,718 பேர் தமிழகத்தில் கொரோனா பாதிப்படைந்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios