தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை 14,000 நெருங்கியுள்ளது. அதேபோல், இதுவரை இல்லாத வகையில் உயிரிழப்பு எண்ணிக்கையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை 14,000 நெருங்கியுள்ளது. அதேபோல், இதுவரை இல்லாத வகையில் உயிரிழப்பு எண்ணிக்கையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கடந்த 24 மணிநேரத்தில் 13,776 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதில், தமிழகத்தில் 13,732 , வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 44 பேர் அடங்குவர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,51,487ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 6வது நாளாக 3,842 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,01,541ஆக உயர்ந்துள்ளது. 

இன்று மட்டும் 1,25,593 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதுவரை 2,17,54,456 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளது.இன்று கொரோனா உறுதியானவர்களில், 8,432 பேர் ஆண்கள், 5,344 பேர் பெண்கள் என பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 6,34,824 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 4,16,625 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 38 ஆகவும் உள்ளது.

இன்று மட்டும் 8,078 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 9,43,044ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் 78 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 34 பேரும், தனியார் மருத்துவமனையில் 44 பேரும் உயிரிழந்தனர். இதனையடுத்து, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 13,395ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,25,593 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதில், 12 வயதிற்குட்பட்ட 514 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஏப்ரல் 5ம் தேதி 128 சிறார்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகபட்சமாக செங்கல்பட்டு 985, கோவை 889, திருவள்ளூர் 807, மதுரை 501, நெல்லை 517 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.