Asianet News TamilAsianet News Tamil

மக்களே உஷார்.. தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் வேகமாக பரவும் கொரோனா.. மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்.!

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Corona is spreading fast in these 5 districts in Tamil Nadu
Author
Tamil Nadu, First Published Mar 25, 2021, 2:49 PM IST

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்த நிலையில் திடீரென மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 50,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Corona is spreading fast in these 5 districts in Tamil Nadu

இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பரவல் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- இந்தியாவில் கடந்த ஆண்டு டிசம்பர் 15-ம் தேதிக்கு தற்பொழுது, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளதாக தெரிவித்தார். கொரோனா பரவல் அதிகம் இருக்கக்கூடிய முதல் 10 மாவட்டங்களில் புனே, நாக்பூர், மும்பை, தானே, நாசிக் மற்றும் பெங்களூரு ஆகியவை இடம்பெற்றுள்ளது. 

Corona is spreading fast in these 5 districts in Tamil Nadu

மகாராஷ்டிரா மாநிலத்தில் மார்ச் 1-ம் தேதி தினசரி கொரோனா பாதிப்பு 8 ,293 என்ற அளவில் இருந்த நிலையில் தற்போது 28,699ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் பஞ்சாபில் மார்ச் 1-ம் தேதி 579 ஆக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு தற்போது 2,254 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தை பொருத்தமட்டில் தினசரி கொரோனா பாதிப்பு மார்ச் 1-ம் தேதிக்குப் பிறகு வெகுவாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில், சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்டங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் எண்ணிக்கை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios