தமிழ்நாட்டில் இன்று மேலும் 3965 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,34,226ஆக அதிகரித்துள்ளது.  

தமிழ்நாட்டில் இன்று மேலும் 3965 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,34,226ஆக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக, பரிசோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இன்று 37,825 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 3965 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. எனவே தமிழ்நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,34,226ஆக அதிகரித்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னையில் கொரோனா பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவருவது நல்ல சமிக்ஞையாக அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவந்த நிலையில், இன்று வெகுவாக குறைந்துள்ளது. இன்று 1185 பேருக்கு மட்டுமே சென்னையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனவே சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 76,158 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்துவருவது மட்டுமே ஒரே ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக அமைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 3591 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 85,915 ஆக அதிகரித்துள்ளது. 46,410 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

தமிழ்நாட்டில் இன்று 69 பேர் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 1898ஆக அதிகரித்துள்ளது.