தமிழ்நாட்டில் நேற்று மாலை நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3023. 1379 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 30 பேர் உயிரிழந்துள்ளனர். 

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னையில்1458 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு, கடந்த சில நாட்களாக கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்து சொந்த ஊர்களுக்கு திரும்பியவர்களால், மற்ற மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. 

கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்த தொழிலாளர்கள், வியாபாரிகள் என சொந்த ஊர்களுக்கு திரும்பியவர்கள் மற்றும் சென்னையை சேர்ந்தவர்கள் என கோயம்பேடு மூலம் பரவிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 300ஐ கடந்துவிட்டது. 

கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்து ஊருக்கு திரும்பிய பலருக்கு கொரோனா உறுதியாவதால் கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கொரோன பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. 

விழுப்புரத்தில் நேற்று ஒருநாளில் கோயம்பேடு தொடர்புடைய 32 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், கோயம்பேட்டிலிருந்து சென்றவர்களில் மொத்தமாக கடலூரில் 129 பேருக்கும் விழுப்புரத்தில் 76 பேருக்கும் சென்னையில் 69 பேருக்கும் அரியலூரில் 42 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 7 பேருக்கும் என மொத்தம் தமிழ்நாடு முழுவதும் கோயம்பேட்டால் பரவிய பாதிப்பு எண்ணிக்கை 300ஐ கடந்துவிட்டது. 

சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமாக இல்லை என்ற ஒன்று மட்டுமே ஆறுதலாக இருந்துவந்த நிலையில், தற்போது அதுவும் போய்விட்டது. கோயம்பேட்டால் தமிழ்நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.