தமிழ்நாட்டில் இன்று மேலும் 5880 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,85,024ஆக அதிகரித்துள்ளது.  

தமிழ்நாட்டில் இன்று மேலும் 5880 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,85,024ஆக அதிகரித்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளை தமிழக அரசு மிகச்சிறப்பாக மேற்கொண்டுவருகிறது. அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலமே, தொற்றுள்ளவர்களை அதிகமாக கண்டறிந்து விரைவில் கட்டுப்படுத்த முடியும். அந்தவகையில், தமிழ்நாட்டில் அதிகமான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. 

தமிழ்நாட்டில் இன்று 65189 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 5880 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,85,024ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் கடந்த ஒரு மாதமாகவே கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்திருந்த நிலையில், 2 மாதங்களுக்கு பிறகு இன்றைய தினம் ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. இன்று சென்னையில் 984 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,07,109ஆக அதிகரித்துள்ளது. மற்ற மாவட்டங்களிலும் பாதிப்பு குறைந்துவருகிறது.

இன்று 6488 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,27,575ஆக அதிகரித்துள்ளது. 52,759 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இன்று 119 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 4690ஆக அதிகரித்துள்ளது.