தமிழ்நாட்டில் இன்று மேலும் 5980 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை  ஆக அதிகரித்துள்ளது.  

தமிழ்நாட்டில் இன்று மேலும் 5980 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை ஆக அதிகரித்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழ்நாட்டில் கொரோனாவை விரைந்து கட்டுப்படுத்தும் வகையில், அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அந்தவகையில், இன்று 73,547 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், மேலும் 5980 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. எனவே மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,73,410ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் இன்று மேலும் 1294 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதையடுத்து சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,24,071ஆக அதிகரித்துள்ளது. 

இன்று 5603 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியிருப்பதால், இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,13,280ஆக அதிகரித்துள்ளது. இன்று 80 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 6420ஆக அதிகரித்துள்ளது.