தமிழ்நாட்டில் இன்று மேலும் 5835 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,20,355ஆக அதிகரித்துள்ளது.  

தமிழ்நாட்டில் இன்று மேலும் 5835 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,20,355ஆக அதிகரித்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்தவகையில், இன்று 67,275 பரிசோதனைகள் செய்யப்பட்டதில், 5835 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. எனவே தமிழ்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,20,355ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது. கடந்த சில நாட்களாகவே தினமும் ஆயிரத்துக்கும் குறைவான பாதிப்பே உறுதியாகிவருகிறது. இன்று 989 பேருக்கு தொற்று உறுதியானதால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1,13,058ஆக அதிகரித்துள்ளது. மற்ற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு குறைந்துவருகிறது.

தமிழ்நாட்டில் அதிகமான பரிசோதனை செய்யப்படும் போதிலும், பாதிப்பு குறைந்துள்ளதுடன் சேர்த்து, மற்றொரு நல்ல செய்தி என்னவென்றால், அதிகமானோர் குணமடைந்தும் வருகின்றனர். இன்று 5146 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனதையடுத்து மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 2,61,459ஆக அதிகரித்துள்ளது. 

53499 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இன்று 119 பேர் உயிரிழந்தனர். எனவே உயிரிழப்பு எண்ணிக்கை 5397ஆக அதிகரித்துள்ளது.