தமிழ்நாட்டில் இன்று மேலும் 5879 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 2,51,738ஆக அதிகரித்துள்ளது.  

தமிழ்நாட்டில் இன்று மேலும் 5879 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 2,51,738ஆக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்தும் முனைப்பில் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தினமும் 60 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த 2 நாட்களாக தமிழ்நாட்டில் 6 ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்புகளே உறுதியாகியிருந்த நிலையில், இன்றும் பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்துக்கும் குறைவாகவே பதிவாகியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இன்று 5879 பேருக்கு கொரோனா தொற்று உறுதியனாது. எனவே தமிழ்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,45,859ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் 1074 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1,00,877ஆக அதிகரித்துள்ளது. கடந்த 3 வாரமாக சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மற்ற மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துவருகிறது. கொரோனா தீவிரம் அதிகமாக இருக்கும் பகுதிகளை கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்காகத்தான் குழு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்தும் வருகின்றனர். அந்தவகையில் இன்று 7010 பேர் டிஸ்சார்ஜ் ஆனதையடுத்து, கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,90,966ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 25ம் தேதி ஒரேநாளில் அதிகபட்சமாக 7758 பேர் டிஸ்சார்ஜ் ஆனநிலையில், இன்று இரண்டாவது முறையாக 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 

இன்று 99 பேர் உயிரிழந்ததையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 4034ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அதிகமான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. ஆனாலும் பாதிப்பு தாறுமாறாக அதிகரிக்காமல் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்திருக்கும் அதேவேளையில், தினமும் பாதிப்புக்கு நிகராகவோ அல்லது அதற்கு அதிகமாகவோ குணமடைவோரின் எண்ணிக்கையும் இருக்கிறது.