தமிழ்நாட்டில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 6785 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1,99,749ஆக அதிகரித்துள்ளது.  

தமிழ்நாட்டில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 6785 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1,99,749ஆக அதிகரித்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்தும் முனைப்பில் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு குறைந்துவரும் 21 மாவட்டங்களில் குழு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 

அந்தவகையில், இன்று இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக இன்று 65150 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் புதிதாக 6785 பேருக்கு கொரோனா தொற்று உறுதியனாது. எனவே தமிழ்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,99,749ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கிவிட்டது. பரிசோதனைகள் அதிகமாக மேற்கொள்ளப்படுவதால் அதிகமான பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன. அதனால் தான் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக பதிவாகியிருக்கிறது.

இன்று சென்னையில் 1299 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 92206ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2 வாரமாக சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மற்ற மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துவருகிறது. கொரோனா தீவிரம் அதிகமாக இருக்கும் பகுதிகளை கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்காகத்தான் குழு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்தும் வருகின்றனர். அந்தவகையில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 6504பேர் டிஸ்சார்ஜ் ஆனதையடுத்து, கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,43,297அதிகரித்துள்ளது. 

கொரோனாவுக்கு எதிரான போரில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டுவருகிறது. அதிகமான பரிசோதனைகளை செய்து, அதிகமான பாதிப்பை கண்டறிந்து கட்டுப்படுத்துவதுடன், சிறப்பான சிகிச்சையளித்து அதிகமானோர் குணப்படுத்தப்படுகின்றனர். கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு ஆகிய இரண்டுவிதமான பணிகளையும் தமிழக அரசு சிறப்பாக செய்துவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சரியான பாதையில் வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது தமிழ்நாடு. 

நேற்று 88 பேர் உயிரிழந்த நிலையில், இன்றும் 88 பேர் உயிரிழந்திருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை 3320ஆக அதிகரித்துள்ளது.