தமிழகத்தில் முதல் முறையாக கொரோனாவிலிருந்து குணமடைந்த இளைஞர் ஒருவருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. சென்னையில் மட்டும் அதிகபட்சமாக தமிழகத்தில் இதுவரை 30,192 பேர் பாதிக்கப்படுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 20,993 பேர் பாதிப்புகுள்ளாகி உள்ளனர். சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 15 நாட்கள் ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைப் பெற்று வந்த அவருக்கு கடந்த மே 3-ம் தேதி கொரோனாவிலிருந்து குணமடைந்து  வீடு திரும்பினார். 

இந்நிலையில் அந்த இளைஞருக்கு வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து அவர் புரசைவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு குடல்வால் அழற்சி நோய் இருப்பதை உறுதி செய்தனர். அத்துடன் அவருக்கு அங்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது  உறுதிசெய்யப்பட்டதால் மருத்துவர்கள்  அந்த இளைஞக்கு சிகிச்சையளிக்க மறுத்துவிட்டனர். இதனையடுத்து அந்த இளைஞர் ராஜீவ்காந்தி மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த  மருத்துவர்கள் கொரோனோ தொற்று மற்றும்   குடல்வால் அழற்சிக்கு  சிகிச்சையளித்து வருகின்றனர்.