தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,342 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம்  பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,342 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- கடந்த 24 மணிநேரத்தில் 2,342 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,84,094 ஆக அதிகரித்து உள்ளது. இன்று மட்டும் 83,154 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதுவரை 1,95,11, 655 மாதிரிகள் சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 

இன்று கொரோனா உறுதியானவர்களில், 1,404 பேர் ஆண்கள், 938 பேர் பெண்கள் என பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 5,33,873 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,50,185 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 36 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 1,463 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 

இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8,56,548 ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதித்த 16 பேர் உயிரிழந்துள்ளனர் அவர்களில் 7 பேர் தனியார் மருத்துவமனையிலும் 9 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 12,700 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 14,846 பேர் சிகிச்சையில் உள்ளனர்.