Asianet News TamilAsianet News Tamil

3 மாதத்திற்கு பிறகு மீண்டும் சிலிண்டர் விலை உயர்வு... அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!

வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று முதல் 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, சிலிண்டர் விலை ரூ.825.50ல் இருந்து ரூ.850.50ஆக விலை உயர்ந்துள்ளது.

Cooking gas prices hiked by over Rs.25
Author
Chennai, First Published Jul 1, 2021, 11:23 AM IST

வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று முதல் 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, சிலிண்டர் விலை ரூ.825.50ல் இருந்து ரூ.850.50ஆக விலை உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் மாற்றம் ஏற்படுகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினசரியும், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, மாதத்தில் ஒரு முறை அல்லது இருமுறை மாற்றம் செய்யப்படுகின்றன. வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைக்கொண்ட சிலிண்டர் கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி 610 ரூபாயாக இருந்தது. அதன்பிறகு, படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது.

Cooking gas prices hiked by over Rs.25

இந்நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் கடந்த மாதம் ரூ.825.50 விலையில் விற்பனையான சமையல் எரிவாயு சிலிண்டர், இன்று முதல் ரூ.850.50 ஆக உயர்ந்துள்ளது.

Cooking gas prices hiked by over Rs.25

இதேபோல் வணிக ரீதியான எரிவாயு சிலிண்டர் மீதும் ரூ.84.50 காசுகள் விலை உயர்ந்து சிலிண்டர் ரூ.1,687.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் சிலிண்டர் விலை உயர்ந்திருப்பது இல்லத்தரசிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios