Asianet News TamilAsianet News Tamil

அடுத்த ஒரு மாதம் இதை மட்டும் செய்யுங்க கொரோனாவை விரட்டலாம்.. சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல்..!

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை கண்டு பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம் என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Controlling the infection if everyone wears a mask for the next one month..Special Officer Radhakrishnan
Author
Chennai, First Published Jun 5, 2020, 12:03 PM IST

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை கண்டு பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம் என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி வளாகத்தில் ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டிளித்த அவர்;- சென்னை நகர் முழுவதும் கொரோனா பரவுகிறது என பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். அடுத்த ஒரு மாதத்திற்கும் மாஸ்க் அணிவதை முழுமையாக கடைபிடித்தால் தொற்றை கட்டுப்படுத்தலாம் என்றார். 

Controlling the infection if everyone wears a mask for the next one month..Special Officer Radhakrishnan

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை கண்டு பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.  சென்னையில் திருவிக நகரில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தண்டையார்பேட்டை, ராயபுரம் பகுதிகள் சவாலானவைகளாக உள்ளன. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான படுக்கை வசதிகள் உள்ளன என்றார். 

Controlling the infection if everyone wears a mask for the next one month..Special Officer Radhakrishnan

மேலும், பேசிய அவர் மாஸ்க் அணியாமல் வெளியே சுற்றினால் வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரித்துள்ளார். தெருத்தெருவாக நோய் அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து பரிசோதனை நடத்தப்படுகிறது. கொரோனா பகுதியில் தடுப்பை தாண்டி வெளியே வந்தால் வழக்கு பதிவு செய்து தனிமைப்படுத்த நேரிடும் என்று கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios