School holiday TN : பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. தொடர் விடுமுறை.. வெளியாக போகும் சூப்பர் அறிவிப்பு..!
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உட்பட பகுதிகளில் பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதிவ், பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில், 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வரும் 19ம் தேதி முதல் 23 ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக, பிப்ரவரி 18, 19ல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட உள்ளது. ஓட்டு எண்ணிக்கை நடக்கும் 22ம் தேதி வரை இந்த விடுமுறையை நீட்டிக்க, பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்து வந்த நிலையில் திடீரென பாதிப்பு எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்தது. இதனையடுத்து, பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, கொரோனா தாக்கம் குறைந்து வருவதையடுத்து பள்ளிகள் பிப்ரவரி 1ம் தேதி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பள்ளியும் மாணவர்களுக்கு வழக்கமான எட்டு பாட வேளைகளில் வகுப்புகளை நடத்தவும், பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உட்பட பகுதிகளில் பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதிவ், பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில், 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வரும் 19ம் தேதி முதல் 23 ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
பெரும்பாலும், பள்ளிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. தேர்தல் நடைபெற உள்ளதால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் 23ம் தேதி திறக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.