சென்னையில் கொரோனா நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தனியார் மருத்துவமனையில் மருத்துவர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக  அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னையில் கொரோனா நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தனியார் மருத்துவமனையில் மருத்துவர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நேற்றும் மட்டும் தமிழகத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 1,927 பேரில் சென்னையில் மட்டும் 1,392 பேர் உள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,937ஆக அதிகரித்துள்ளது. இதில் 12,507 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 258 பேர் உயிரிழந்துள்ளனர். 

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,405ஆக உயர்ந்துள்ளது. தண்டையார்பேட்டையில் 3,405 பேரும், தேனாம்பேட்டையில் 3,069 பேரும், கோடம்பாக்கத்தில் 2,805 பேருக்கும், திரு.வி.க.நகரில் 2,456 பேருக்கும், அண்ணாநகரில் 2,362 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால், சென்னையில் மருத்துவமனைகளில் படுக்கை வசதி தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதை திட்டவட்டமாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுத்திருந்தார். 

இந்நிலையில், சென்னையில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில், தனியார் மருத்துவமனையில் மருத்துவர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவர்கள் தட்டுப்பாட்டால் படுக்கை வசதி ஏற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் வருகை போல, தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் வருகை இல்லை என்றும் கூறப்படுகிறது. மருத்துவமனைகளில் படுக்கை வசதி தட்டுப்பாடு இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறிய நிலையில், தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.