தமிழக காங்கிரஸ் கட்சியில் அடுத்த விக்கெட் காலி.. பாஜகவில் இணையும் எம்.எல்.ஏ விஜயதாரணி.?
தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான விளவங்கோடு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ விஜயதாரணி பாஜகவில் சேர உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக காங்கிரஸில் பிரபல தலைவராக இருக்கும் விஜயதாரணி பாஜகவில் இணையப் போவதாக செய்தி ஒன்று ஆகும். கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களாக குமரி மாவட்ட மக்களிடையே பெரும் பரபரப்பாக பேசும் பொருளாக மாறி உள்ளது.
விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை எம்எல்ஏவாக தேர்வான விஜயதாரணி இந்த முறை எம்பி சீட்டு கேட்டு, மேலிடம் மறுப்பு தெரிவித்துள்ளது. பாஜவில் யாருடனும் தான் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று கூறியுள்ளார்.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 190 கிமீ தூரம் பயணிக்கலாம்.. புதிய எலக்ட்ரிக் பைக் வாங்க அருமையான வாய்ப்பு..
இன்று இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் தெரிவித்தார். ஆனால், பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான தகவலை அவர் திட்டவட்டமாக மறுக்கவில்லை. முன்னதாக ஜே. பி. நட்டா முன்னிலையில் இன்று விஜயதாரணி பாஜகவில் இணைவார் என தகவல் வெளியாகி இருந்தது.
இன்று பேசிய விஜயதாரணி, காங்கிரஸ் கட்சியில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவராக ராஜேஷ் குமார் எம்எல்ஏவை நியமனம் செய்யப்படும்போது எம்எல்ஏக்களிடம் ஆலோசனை மேற்கொள்ளவில்லை. பாஜகவில் இணைவது குறித்து விரைவில் அறிவிப்பேன். விஜயதரணி எம்எல்ஏ பேட்டி அளித்துள்ளார்.
குறைந்த விலையில் சிம்லா, குலு மணாலி செல்ல அருமையான டூர் பேக்கேஜ்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?