தலையில்லா முண்டம் என்று காங்கிரசை விமர்சித்த சீமானுக்கு காங்கிரஸ் சிறுபான்மை துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  

தமிழக காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை மாநில தலைவர் அஸ்லம் பாஷா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காங்கிரஸ் கட்சியை தலையில்லா முண்டமாக ஒரு தலைவனை தீர்க்கக் கூடிய தகுதி இல்லாத கட்சியாக இருக்கிறது என்று சீமான் கூறியது கண்டிக்கத்தக்கது. காங்கிரஸ் கட்சியில் தோல்வியை ஏற்று காந்திய வழியில் ராகுல் காந்தி தோல்வியை ஒப்புக்கொண்டு தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆனால், இன்றைய காலகட்டத்திலும் அப்படியே ராஜினாமாவை ஏற்காத அனைத்து தலைவர்களும் அவர்தான் தலைவராக வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இதுவரையில் தலைவரை தேர்ந்தெடுக்க முடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது. கட்சி தொடங்கிய பிறகு சீமான் எத்தனை முறை தேர்தலில் போட்டியிட்டார். சீமான் கட்சியை சேர்ந்தவர்கள் இதுவரை யாராவது வெற்றி பெற்றிருக்கிறார்களா?. அப்படிப்பட்ட சீமான் ஏன் இதுவரை தலைவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என கூறப்பட்டுள்ளது.