சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு மதியம் செஞ்சியில் இருந்து அரசு பேருந்து வந்தது. பேருந்தை ரமேஷ்பாபு(51) என்பவர் ஓட்டி வந்தார்.  இந்த பேருந்து கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் திரும்பியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம், ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ நொறுங்கியது. 

சென்னை கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய கல்லூரி மாணவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவரது உயிரை ஆட்டோ காப்பாற்றியுள்ளார்.

கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு மதியம் செஞ்சியில் இருந்து அரசு பேருந்து வந்தது. பேருந்தை ரமேஷ்பாபு(51) என்பவர் ஓட்டி வந்தார். இந்த பேருந்து கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் திரும்பியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம், ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ நொறுங்கியது. 

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கல்லூரி மாணவன்

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவன் சஞ்சய்(21) பேருந்து சக்கரத்துக்கு அடியில் சிக்கிக்கொண்டார். ஆனால், ஆட்டோ மீது மோதியதால் வேகம் குறைந்த பேருந்து நின்றுவிட்டதால் மாணவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதில், லேசான காயம் அடைந்த மாணவரை அப்பகுதியினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ,துகுறித்து தகவல் அறிந்ததும் கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். இதுதொடர்பாக போலீசார் பேருந்து ஓட்டுநர் ரமேஷ் பாபுவிடம் விசாரணை மேற்கொண்டனர்.