சென்னையில் ரயில் மோதி கல்லூரி மாணவி பலி..!
சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சோனியா (19). தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.பி.ஏ. படித்து வருகிறார். நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் தோழிகளுடன் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சென்று சுற்றி பார்த்துவிட்டு மாலை வீட்டிற்கு செல்வதற்காக தோழிகளுடன் வண்டலூர் ரயில்வே நிலையத்திற்கு வந்துள்ளார்.
சென்னை வண்டலூர் ரயில் நிலையத்தில் ரயில் மோதி கல்லூரி மாணவி சோனியா(19) உடல்சிதறி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சோனியா (19). தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.பி.ஏ. படித்து வருகிறார். நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் தோழிகளுடன் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சென்று சுற்றி பார்த்துவிட்டு மாலை வீட்டிற்கு செல்வதற்காக தோழிகளுடன் வண்டலூர் ரயில்வே நிலையத்திற்கு வந்துள்ளார்.
இதையும் படிங்க;- ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளியை நெருங்கிய போலீஸ்? பிரபல ரவுடிகள் 12 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை.!
அப்போது, ரயில் வந்து நின்ற போது பிறர் தண்டவாளத்தின் குறுக்கே கடந்த நடைமேடையில் ஏறிய நிலையில், உயரம் குறைவாக இருந்த சோனியா அப்படி ஏற முடியாததால் தண்டவாளத்தில் நடந்து நடைமேடைக்கு செல்லும் போது எதிரே வந்த விரைவு ரயில் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில், உடல் சிதறி சோனியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து உடனே தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த மாணவி சோனியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இதையும் படிங்க;- சினிமாவையே மிஞ்சிய தரமான சம்பவம்.. தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை தடுத்து நிறுத்திய நிறைமாத கர்ப்பிணி.!