தமிழகத்தில் குழந்தைகள் தொடர்ந்து கடத்தப்படுவதாகவும், அவர்கள் கடத்தப்பட்டு கொல்லப்படுவதாகவும் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக வீடியோ ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. இதன் உண்மை தன்மை குறித்து விளக்கமளித்துள்ளது தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு.
அண்மைக்காலமாக குழந்தைகளை சிலர் கடத்த முயற்சிப்பதாக பொய்யான காணொலிகள் வேகமாக பரவி வருகிறது. சமீப காலமாக சில நபர்கள், குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான காணொலிகள் சமூக வலைதளங்களில் வேமாக பரவி வருகிறது.
குறிப்பாக தமிழகத்தில் குழந்தைகள் தொடர்ந்து கடத்தப்படுவதாகவும், அவர்கள் கொல்லப்படுவதாகவும் வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு உண்மைத் தன்மை குறித்து விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து உண்மை சரிபார்ப்பு குழு வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “ராஜஸ்தானில் உள்ள நாகூர் பகுதியில் குப்பை போடுவதற்கென வெட்டப்பட்ட குழி அருகே குழந்தைகள் விளையாடி உள்ளனர். அப்போது தவறி விழுந்து பலியாகினர். இந்த சம்பவம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. மற்றொரு வீடியோவில், வட இந்திய பகுதிகளில் குழந்தைகள் கடத்தல் தொடர்பான பிரச்சாரத்தில் எடுக்கப்பட்ட வீடியோ இது.
அந்த வீடியோ தொடக்கத்தில் டிஸ்க்ளைமர் வாசகமும் இடம்பெற்றுள்ளது. மற்றொரு வீடியோவில், உத்தர பிரதேசத்தில் உள்ள ஹெம்பூர் படவாவில் 2017ம் ஆண்டு சிறுத்தை தாக்கியதால் உயிரிழந்த குழந்தை ஆகும். அதேபோல மற்றொரு காணொளியில் மெக்சிகோவில் 2018ம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் ஆகும்.
மேற்கண்ட சம்பவங்களை தமிழகத்தில் நடைபெறுவது போன்று சித்தரித்து சிலர் பரப்பு வருகின்றனர். தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தல் என்ற பெயரில் பரப்பப்படும் இந்த வீடியோவை நம்பவோ, பரப்பவோ வேண்டாம் என்று உண்மை சரிபார்ப்பு குழுவினால் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெறும் 37 ஆயிரம் ரூபாய்க்கு ஆப்பிள் ஐபோன் 15 வாங்கலாம்.. தள்ளுபடி விலையில் ஐபேடையும் வாங்குங்க..
