சென்னையில் அதிர்ச்சி.. கூல்டிரிங்ஸ் குடித்த சிறுமி.. உடல் நீல நிறமாக மாறி, மூக்கில் ரத்தம் கசிந்து உயிரிழப்பு?

சென்னை பெசன்ட் நகர் பகுதியிலுள்ள மளிகை கடையில் குளிர்பானம் வாங்கி குடித்த சிறிது நேரத்தில் சிறுமி மூக்கில் இருந்து ரத்தம் கசிந்து உடல் நீல நிறமாக மாறி துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

child girl who drank cooldrinks dead

சென்னை பெசன்ட் நகர் பகுதியிலுள்ள மளிகை கடையில் குளிர்பானம் வாங்கி குடித்த சிறிது நேரத்தில் சிறுமி மூக்கில் இருந்து ரத்தம் கசிந்து உடல் நீல நிறமாக மாறி துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பெசன்ட் நகர் பகுதியில் சதீஷ், காயத்திரி தம்பதி. இவர்களது 13 வயது இளைய மகள் தரணி என்பவர் கூல் டிரிங்ஸ் வாங்குவதற்காக அருகில் உள்ள மணி என்பவர் கடைக்கு சென்றுள்ளார். இந்த கடையில் டொகிட்டோ கோலா என்ற  கூல் டிரிங்ஸை 10 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். அத்துடன் ரஸ்னா பாக்கெட்டையும் வாங்கியுள்ளார். 

child girl who drank cooldrinks dead

இந்நிலையில், இந்த இரண்டு குளிர்பானங்களையும் அந்த சிறுமி குடித்துள்ளார். குடித்த சிறிது நேரத்தில் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு, வாந்தி வந்துள்ளது. இதனையடுத்து, அவரது சகோதரி அஸ்வினி என்பவர் தனது தாயாரை அழைத்து வர சென்றுள்ளார். இவர் வீட்டிலேயே  மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த சிறுமி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அவர் உடல் முழுவதும் நீல நிறத்தில் மாறியுள்ளது. இதுகுறித்து அவரது உறவினர்கள் மளிகை கடையில் கேட்ட போது அலட்சியமாக அவர் பதிலளித்ததாக கூறப்படுகிறது. 

child girl who drank cooldrinks dead

இதுதொடர்பாக சாஸ்திரி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது, போலீசார் அந்த சிறுமி உட்கொண்ட கூல் டிரிங்ஸ் பாட்டிலையும், ரஸ்னா பாக்கெட்டையும் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். அதேபோல், இந்த சிறுமி உயிரிழந்ததற்கான காரணம் குறித்து பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த மளிகை கடையில் காலாவதியான பொருட்களையும், தரமற்ற பொருட்களை விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios