இனி தாம்பரம் டூ வேளச்சேரி வாகன நெரிசலுக்கு நோ நோ.. சென்னையில் மிக நீளமான பாலம் இன்று திறந்து வைப்பு..
நெடுஞ்சாலைத் துறை சார்பில் 95.21 கோடி ரூபாய் மதிப்பிட்டில் கட்டப்பட்டுள்ள மேடவாக்கம் மேம்பாலத்தின் தாம்பரம் - வேளச்சேரி பாலப்பகுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதன் மூலம் சென்னையில் மிக நிளமான பாலம் என்ற பெருமையுடன் இந்த புதிய பாலம் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும் தாம்பரம் முதல் வேளச்சேரி வரையிலான போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது.
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மேடவாக்கத்தில், 95.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேடவாக்கம் மேம்பாலத்தின் தாம்பரம் - வேளச்சேரி பாலப்பகுதியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இது சோழிங்கநல்லுர், மாம்பாக்கம்,மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் தாம்பரம்- வேளச்சேரி பகுதிகளை மிக எளிதாக இணைக்கும் வகையில் சுமார் 2.06 கி.மீ நிளத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.146.41 கோடி மதிப்பீட்டில், மேடவாக்கத்தில் மறைமலையடிகள் பாலம் - ஒரும்புலியூர் சாலையில் மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலை சந்திப்பு, மேடவாக்கம் - மாம்பாக்கம் சாலை சந்திப்பு மற்றும் மவுண்ட் - மேடவாக்கம் சாலை சந்திப்புகளை இணைக்கும் வகையில் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணி இரண்டு
தனித்தனி மேம்பாலங்களாக ஒவ்வொன்றும் 3 வழித்தட மேம்பாலமாக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மாட்டு கறி பிரியாணியில் தீண்டாமை.? திருப்பத்தூர் கலெக்டருக்கு தேவையா இது.? அலறவிடும் SC-ST ஆணையம்.
இதில் வேளச்சேரி - தாம்பரம் தடத்தில், மேடவாக்கம் சோழிங்கநல்லூர் சாலை சந்திப்பு மற்றும் மேடவாக்கம் - மாம்பாக்கம் சாலை சந்திப்புகளை இணைத்து 1.06 கி.மீ. நீளத்தில் மேம்பாலப்பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது. தற்போது, தாம்பரம் - வேளச்சேரி தடத்தில், மவுண்ட் மேடவாக்கம் சாலை சந்திப்பு, மேடவாக்கம் - மாம்பாக்கம் சாலை சந்திப்பு மற்றும் மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலை சந்திப்புகளை இணைத்து 2.03 கி.மீ. நீளத்தில் இம்மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பாலம் திறக்கப்பட்டுள்ளதால், மேடவாக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பயண நேரம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தாம்பரம், வேளச்சேரி, துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, கிழக்கு கடற்கரை சாலை, தரமணி, அடையாறு, மேடவாக்கம், சோழிங்கநல்லூர் மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளுக்கு செல்லும் மக்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு, குறு, சிறு
மற்றும் நடுத்தர தாழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்
துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க: ராஜ்யசபா சீட்டை தட்டிப் பறிக்க போகும் திமுக- அதிமுக வேட்பாளர் யார்? போட்டி போடும் நிர்வாகிகள்..!