முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேலூரில் மூன்று நாட்கள் பிரசாரம் செய்கிறார். இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை:

வேலூர் நாடாளுமன்ற மக்களவை தொகுதிக்கான பொதுத்தேர்தல் ஆகஸ்ட் 5ம் தேதி அன்று நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து 27, 28ம் தேதி மற்றும் 2.8.2019 ஆகிய தேதிகளில், வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாணியம்பாடி, ஆம்பூர், கீழ்வைத்தியணான்குப்பம், குடியாத்தம், அணைக்கட்டு,

வேலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பிரசாரம் செய்கிறார்.

அதன்படி இன்று மாலை 5 மணி வாணியம்பாடி, ஆம்பூரிலும், 28ம் தேதி (ஞாயிறு) மாலை 5 மணி கீழ்வைத்தியணான்குப்பம், குடியாத்தம் ஆகிய பகுதிகளிலும், ஆகஸ்ட் 2ம் தேதி (வெள்ளி) மாலை அணைக்கட்டு, வேலூர் ஆகிய பகுதிகளிலும் பிரசாரம் செய்கிறார் என கூறப்பட்டுள்ளது.