Asianet News TamilAsianet News Tamil

செட்டிநாடு குழுமத்தில் 700 கோடி வரி ஏய்ப்பு... 110 கோடி ரூபாய் வெளிநாட்டு சொத்துகள்.. IT பகீர் தகவல்..!

செட்டிநாடு குழுமத்தில் 60 இடங்களில் நடைபெற்ற சோதனையில் 700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், கணக்கில் வராத 110 கோடி ரூபாய் வெளிநாட்டு சொத்துகள் சிக்கியுள்ளதாவும் வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Chettinad Group...Rs 700 cr tax evasion
Author
Chennai, First Published Dec 15, 2020, 6:26 PM IST

செட்டிநாடு குழுமத்தில் 60 இடங்களில் நடைபெற்ற சோதனையில் 700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், கணக்கில் வராத 110 கோடி ரூபாய் வெளிநாட்டு சொத்துகள் சிக்கியுள்ளதாவும் வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

செட்டிநாடு குழுமம் என்பது சிமெண்ட் உற்பத்தி நிறுவனம், மின் உற்பத்தி நிறுவனம், நிலக்கரி நிறுவனம், மருத்துவ பல்கலைக் கழகம், பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள், போக்குவரத்து, செக்யூரிட்டி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகின்றது.

Chettinad Group...Rs 700 cr tax evasion

இந்நிலையில், வரி ஏய்வு புகார் தொடர்பாக கடந்த 9ம் தேதி வருமான வரித்துறையின் சென்னை, திருச்சி, கோவை மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, மும்பையில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் 100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை 3  நாட்களாக நீடித்தது. இதில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. 

Chettinad Group...Rs 700 cr tax evasion

இந்நிலையில், தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்ட செட்டிநாடு குழும நிறுவனங்களில் கணக்கில் வராத ரூ.23 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மேலும், செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமாக வெளிநாடுகளில் ரூ.110 கோடிக்கு சொத்துக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ரூ. 700 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios