சென்னையில் சோகம்.. மொட்டை மாடியில் துணி காய வைத்த போது மின்சாரம் தாக்கி துடிதுடித்து உயிரிழந்த பெண்.!

திருநின்றவூரில் மொட்டை மாடியில் துணி காய வைத்துக் கொண்டிருந்த 38 வயது பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Chennai woman electrocuted while drying clothes

திருநின்றவூரில் மொட்டை மாடியில் துணி காய வைத்துக் கொண்டிருந்த 38 வயது பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மொட்டை மாடிக்கு மேலே செல்லும் மின்கம்பியை தொட்டதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்து இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர் பாலமுருகன் நகரில் வசிக்கும் சத்யா என்பவரின் மனைவி எஸ்.மேகலா என்பது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க;- மின் கட்டணத்தை 10% குறைத்த தமிழக அரசு.. யாருக்கு, எவ்வளவு தெரியுமா ? முழு விபரம்

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ''குழந்தைகளை பள்ளிக்கும், கணவனை வேலைக்கும் அனுப்பிவிட்டு, மேகலா மொட்டை மாடியில் துணிகளை உலர்த்த சென்றுள்ளார். அப்போது கயிறை அங்கு இருக்கும் மின்சார கம்பியை எடுத்துச் செல்லும் ஒரு கம்பத்தில் கட்டியுள்ளார். எதிர்பாராத விதமாக மின்சார கம்பியை தொட்டுள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து கீழே சாய்ந்துள்ளார். மொட்டை மாடியில் இருந்த அவரது பக்கத்து வீட்டுக்காரர் அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளார்'' என்றனர். 

உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மேகலா, வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விபத்து குறித்து திருநின்றவூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

இதையும் படிங்க;-  திருச்செந்தூர் முருகன் கோயில் செல்போன் பயன்படுத்த தடை.. உயர்நீதிமன்ற மதுரை அதிரடி

இப்பகுதிகளில் வீட்டின் மேல் பக்கமாக மின்சார கேபிள்கள் செல்வதால், மொட்டை மாடிக்கு சென்று விளையாடும் குழந்தைகளுக்கு ஆபத்து காத்திருக்கிறது என்று அந்தப் பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், மின்சார கேபிள்களை நிலத்தடியில் பதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க;-  எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவி தற்கொலை.. என்ன காரணம் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios