வடபழனியில் சென்டர் மீடியனில் வேன் மோதி விபத்து... 10 ஐ.டி. ஊழியர்கள் காயம்..!

சென்னை வடபழனி 100 அடி சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், வடபழனியில் ஐ.டி. நிறுவனத்துக்கு வேலைக்கு செல்ல ஆட்களை அழைத்துச் சென்ற வேன் அதிகவேகத்தில் சென்றுக்கொண்டிருந்தது. 

Chennai Vadapalani van accident .. 10 IT employees injured

சென்னை வடபழனியில் ஐ.டி. நிறுவனத்துக்கு வேலைக்கு செல்ல ஆட்களை அழைத்துச் சென்ற வேன், சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். 

சென்னை வடபழனி 100 அடி சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், வடபழனியில் ஐ.டி. நிறுவனத்துக்கு வேலைக்கு செல்ல ஆட்களை அழைத்துச் சென்ற வேன் அதிகவேகத்தில் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் செண்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். 

Chennai Vadapalani van accident .. 10 IT employees injured

உடனே விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்தில் சிக்கிய வாகனத்தை புறப்படுத்தினர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios