சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து.. உள்ளே சிக்கியவர்களின் நிலை என்ன? பரபரப்பு தகவல்.!
சென்னை, திருவான்மியூரில் அடுக்கு மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சென்னை, திருவான்மியூரில் அடுக்கு மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா அவென்யூ 2வது தெருவில் லைப் ஸ்டைல் அடுக்குமாடி குடியிருப்பு 4ம் தளத்தில் வசிப்பவர் சலீம் பாஷா (68). இவர் மனைவி ஷகிரா (56). நேற்று இரவு இவர்களது படுக்கை அறையின் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த இருவரும் உடனே வீட்டை வீட்டு வெளியேறி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த திருவான்மியூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால், தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்ததால், அசோக் நகர், தேனாம்பேட்டை, துரைப்பாக்கம் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்த நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கட்டிடதத்தில் இருந்தவர் முன்னதாகவே வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் யாருக்கும் சிறிய காயங்கள் ஏற்படவில்லை. முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.