Asianet News TamilAsianet News Tamil

அக்டோபர் 7 முதல் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை... நாள்தோறும் 300 முறை இயக்க திட்டம்..!

 7 ஆம் தேதி முதல் தினமும் 300 முறை ரயில்கள் இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் தேவைக்கு ஏற்ப முழுமையாக புறநகர் ரயில் சேவை துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Chennai suburban electric train service from October 7 ... 300 times daily plan ..!
Author
Chennai, First Published Sep 29, 2020, 6:26 PM IST

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் அனைத்து வகையான ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. இதையடுத்து, படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், சரக்கு ரயில்களும், சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன.

இதனிடையே, கடந்த 7 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் வரும் 7-ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பயணிகள் ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 7-ம் தேதியில் இருந்து தமிழகத்தில் அனைத்து விதமான பொதுப் போக்குவரத்தும் இயல்பு நிலைக்கு திரும்பவுள்ளது.Chennai suburban electric train service from October 7 ... 300 times daily plan ..!

இந்நிலையில், அக்டோபர் 7-ம் தேதியில் இருந்து சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தொடங்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 450-க்கும் மேற்பட்ட புறநகர் ரெயில் சேவை தினசரி செயல்பட்டு வந்த நிலையில், 7 ஆம் தேதி முதல் தினமும் 300 முறை ரயில்கள் இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் தேவைக்கு ஏற்ப முழுமையாக புறநகர் ரயில் சேவை துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios