சென்னையில் ஒரு நிறுவனத்துக்கு சொந்தமான 3 கிளையில் 40 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் ஒரு நிறுவனத்துக்கு சொந்தமான 3 கிளையில் 40 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்தில் குறைந்து இருந்த கொரோனா நோய் பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் புதிதாக 1,289 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல் சென்னையிலும் நோய் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தினசரி நோய் பாதிப்பு 500-ஐ நெருங்கி வருகிறது. நேற்று சென்னையில் மட்டும் 466 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், தரமணி, பெருங்குடி, கந்தன்சாவடி ஆகிய 3 இடங்களில் செயல்பட்டு வரக்கூடிய ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 2 ஊழியர்களுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, சுகாதாரத்துறையினர் அந்த நிறுவனத்தில் வேலை செய்து வரும் 100க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

அந்த பரிசோதனையில் தான் 40 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து தொற்று உறுதி செய்தவர்களின் தொடர்பில் உள்ளவர்களை கண்டறியும் பணியை சென்னை மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 40 பேருக்கும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அந்நிறுவனத்தை மூடி கிருமிநாசினி தெளிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும், ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி செய்ய 
சம்பந்தப்பட்ட நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.