சென்னை கேளிக்கை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்து: 3 பேர் உயிரிழப்பு
இந்த விபத்தில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இறந்தவர்களில் ஒருவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூறாவளி ராஜ் (45) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்ற இரண்டு பேரும் இரண்டு வடமாநிலத் தொழிலாளர்கள். அவர்கள் மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் மற்றும் லாலி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சென்னையில் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புக் குழுவினர் மற்ற இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய மற்றவர்களை பத்திரமாக மீட்டுள்ளனர்.
சென்னை ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள தனியார் கேளிக்கை விடுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி வியாழக்கிழமை இரவு எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் ராஜா அண்ணாமலை புரம் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
மருதம் வளாகத்தில் இருந்து கமாண்டோ படை வீரர்கள் குழுவும், அவர்களின் அடையார் அலுவலகத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF) குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
Chennai Traffic Changes: சென்னை மெட்ரோ கட்டுமானப் பணி காரணமாக OMR சாலையில் போக்குவரத்து மாற்றங்கள்!
இந்த விபத்தில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒருவர் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இறந்தவர்களில் ஒருவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜ் (45) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்ற இரண்டு பேரும் இரண்டு வடமாநிலத் தொழிலாளர்கள். அவர்கள் மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் மற்றும் லாலி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கிழக்கு சென்னை இணை போலீஸ் கமிஷனர் ஜி.தர்மராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. கேளிக்கை விடுதியில் இருந்து 50 அடிக்கும் குறைவான தூரத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிலைய பணிகள் நடப்பதன் காரணமாக மேற்கூரை இடிந்து விழுந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், வல்லுநர்களின் ஆய்வுக்குப் பிறகே உறுதியான தகவல் தெரியவரும்.
இதனிடையே, சம்பவ நடந்த இடத்தை பார்வையிட்ட சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், விபத்து நடந்த கிளப்புக்கு உடனடியாக சீல் வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஓவர் நைட்டில் கோடீஸ்வரரான ஆட்டோ டிரைவர்... லாட்டரியில் லக் அடித்ததால் ஒரே நாளில் மாறிய வாழ்க்கை!