Powercut In Chennai: மக்களே உஷார்.. சென்னையில் இந்த ஏரியாக்களில் இன்று மின்தடை..!
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று. அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியத்தின் மூலம் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பராமரிப்புப் பணி காரணமாக இன்று சென்னையின் முக்கிய பகுதிகளான அம்பத்தூர், கே.கே. நகர் உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று. அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியத்தின் மூலம் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அம்பத்தூர் பகுதி : ஐ.சி.எப் காலனி, கங்கைசாலை, தினேஷ் நகர், செல்லியம்மன் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்
சோத்துப்பெரும்பேடு பகுதி : கம்மபர்பாளையம், தோட்டக்காரன்மேடு, ஒரக்காடு ரோடு , காரனோடை பஜார், ஆத்தூர், வி.ஜி.பி மேடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.
கே.கே. நகர் : வளசரவாக்கம் பகுதி, ஆழ்வார்திருநகர் பகுதி, விருகம்பாக்கம் பகுதி, சாலிக்கிராமம் பகுதி, அசோக்நகர் பகுதி, கே.கே. நகர் பகுதி, அழகிரி நகர் பகுதி, தசரதபுரம் பகுதி, கோடம்பாக்கம் பகுதி, வடபழனி பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.
பெரம்பூர் பகுதி : கே.எச் ரோடு, திருமலை ராஜா தெரு, அயனாவரம், தாகூர் நகர், வில்லிவாக்கம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
தி.நகர் பகுதி : தணிகாசலம் ரோடு, ராமசாமி தெரு, சுப்ரமணிய தெரு, வெங்கடேஷன் தெரு, ராதாகிருஷ்ணன் தெரு, கோபாலகிருஷ்ணா ஐயர் தெரு சீனிவாசா ரோடு, சிங்கரவேலன் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.